விரைவுச்சாலையில் சிக்கிய தமிழ் ஊழியர்.. “இங்கே சைக்கிளில் செல்லக் கூடாது!” – ஓடி உதவிய சிங்கப்பூரர்

Published: 14 Aug 2026, 2:54 PM |
Indian Tamil Worker Singapore Job

சிங்கப்பூரின் சிலேத்தர் விரைவுச்சாலையில் (SLE) வழிதெரியாமல் மிதிவண்டியில் நின்ற தமிழ் ஊழியருக்கு காரில் லிப்ட் கொடுத்து உதவிய சிங்கப்பூரரை அனைவரும் பாராட்டி வருகின்றனர்.

Foong WeiSheng என்பவர் கடந்த ஆகஸ்ட் 6 அன்று SLE வழியாக காரில் சென்றுள்ளார். அப்போது மிதிவண்டியில் நின்றுகொண்டிருந்த தமிழ் ஊழியரை அவர் கண்டுள்ளார்.

இவரும் ஒரு மிதிவண்டி ஓட்டுநர் என்பதால் எப்போதும் சக மிதிவண்டி ஓட்டுனர்களை அவர் கவனிப்பது வழக்கம்.

அதன்படி ஊழியரை கண்டதும் உடனே காரை நிறுத்திய Foong “எங்கே போறீங்க” என கேட்டுள்ளார். அதற்கு ஊழியர், தன்னுடைய ATM அட்டை வேலை செய்யவில்லை என்றும் அதனால் பொதுப்போக்குவரத்தில் தன்னால் செல்ல முடியவில்லை என்றும் கூறியுள்ளார்.

அதன் காரணமாக தாம் Hello Ride வாடகை மிதிவண்டியை எடுத்துக்கொண்டு நார்த் லிங்க் பகுதிக்குச் செல்வதாக ஊழியர் அவரிடம் கூறினார்.

ஊழியர், கூகிள் மேப்பை பயன்படுத்தி விரைவுச்சாலைக்கு வந்ததாகவும், அமைப்பில் “Two-wheeler” என்பதை அவர் தேர்வு செய்ததால் அது SLE விரைவுச்சாலை பக்கம் வழியை காட்டியதாகவும் Foong தனது Facebook பதிவில் தெரிவித்துள்ளார்.

மிதிவண்டியில் விரைவுச்சாலையில் பயணிக்க அனுமதி இல்லை என்பதை ஊழியர் அறியாமல் அங்கு வந்துவிட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

பின்னர் மிதிவண்டியை காரின் பின்னால் ஏற்றுக்கொண்ட Foong, ஊழியரையும் காரின் முன் இருக்கையில் ஏற்றிக்கொண்டு லிப்ட் கொடுத்துள்ளார்.

அதன் பின்னர் ஊழியரை மாண்டாய் ரோட்டில் இறக்கிவிட்டு எப்படி செல்ல வேண்டும் என்ற பாதையையும் விளக்கி கூறியுள்ளார்.

அதுமட்டுமல்லாமல், ஊழியரின் கைபேசியில் இனி கூகிள் மேப்பை எப்படி சரியாக பயன்படுத்த வேண்டும் என்பதையும் அவர் விளக்கி கூறியது காண்போரை ஆச்சரியப்பட வைத்தது.

விரைவுச்சாலையில் சைக்கிளில் நின்றுகொண்டிருந்த ஊழியரின் பாதுகாப்பை உறுதி செய்வதே அவரின் முதன்மை நோக்கமாக இருந்தது.

பொதுநலத்தோடு செயல்பட்ட Foong-இன் மனிதாபிமான செயலை அனைவரும் பாராட்டி வருகின்றனர்.

Photos: Foong WeiSheng / Facebook

MOM, ICA அறிவிப்புகள், வேலை வாய்ப்பு செய்திகளை உடனுக்குடன் துல்லியமாக தெரிந்து கொள்ள - Follow the Singai Tamil Channel on WhatsApp

Join WhatsApp Channel
Photo of author

சிங்கப்பூர் செய்திகள் மற்றும் வெளிநாட்டு ஊழியர்களுக்கு வழங்கப்படும் உரிமைகள் குறித்த தகவல்களை கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக வழங்கி வரும் அனுபவம் வாய்ந்த பத்திரிகையாளர் இவர். இதற்கு முன்னர் தமிழ் மைக் செட் சிங்கப்பூர் மற்றும் தமிழ் டெய்லி சிங்கப்பூர் ஆகிய ஊடகங்களில் ஆசிரியராக பணியாற்றிய அனுபவம் இவருக்கு உண்டு. சிங்கப்பூர் வேலைவாய்ப்பு அனுமதிகள் உள்ளிட்டவை குறித்த அரசின் அதிகாரப்பூர்வ செய்திகளை ஆழமாக ஆராய்ந்து துல்லியமாக உள்ளது உள்ளபடி எழுதுவதில் நிபுணத்துவம் பெற்றவர் இவர்.