ஹவ்காங் பகுதியில் உள்ள சின்மின் (Xinmin Secondary School) பள்ளிக்கு வந்த போலி வெடிகுண்டு மிரட்டலால் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் பள்ளியை விட்டு பத்திரமாக வெளியேற்றப்பட்டனர்.
இது தொடர்பாக பெற்றோருக்கு அனுப்பப்பட்ட குறுந்செய்தி அறிவிப்பில், இன்று (ஆகஸ்ட் 13) காலை சுமார் 8.30 மணியளவில் வெடிகுண்டு அச்சுறுத்தல் குறித்து தகவல் கிடைத்ததை CNA பார்த்தாக குறிப்பிட்டுள்ளது.
இதனை அடுத்து, பள்ளி வளாகத்தில் காவல்துறையினர் சோதனை மேற்கொண்டதாகவும், ஆனால் அங்கு எந்தவித சந்தேகத்திற்கிடமான பொருட்களும் கிடைக்கவில்லை என்றும் அது கூறியுள்ளது.
அங்கு பணிபுரியும் ஊழியர்கள் மற்றும் அனைத்து மாணவர்களும் பாதுகாப்பாக இருப்பதாகவும், மாணவர்கள் மீண்டும் வகுப்புக்களுக்கு திரும்பியதாகவும் கூறப்பட்டுள்ளது.
மேலும், பள்ளி பாடங்கள் வழக்கம்போல நடப்பதாகவும் CNA கூறியுள்ளது.
பள்ளி தரப்பில் இதுகுறித்து மேலதிக கருத்துகள் எதுவும் தற்போதைக்கு தெரிவிக்கப்படவில்லை.