சிங்கப்பூரில் உள்ளாடைகளை திருடிய வெளிநாட்டு கட்டுமான ஊழியருக்கு சிறை

Published: 23 Nov 2026, 1:06 AM |
construction-worker underwear-steals-jail

சிங்கப்பூரில் 6 பெண்களிடமிருந்து சுமார் 13 உள்ளாடைகளை திருடியதாக வெளிநாட்டு கட்டுமான ஊழியருக்கு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.

பெண்களின் உள்ளாடைகள் மீது ஈர்ப்பு கொண்ட அவர் கடந்த 2023 ஆம் ஆண்டு முதலே பெண்களின் உள்ளாடைகளை திருடி அணிந்து வந்ததாக சொல்லப்பட்டுள்ளது.

முன்பு செங்காங் ரிவர்வேலி பகுதியில் வசித்தபோது, மறுசுழற்சி பெட்டியில் போடப்பட்ட உள்ளாடைகளை அவர் எடுத்து சென்று விடுவார் என்றும் கூறப்பட்டுள்ளது.

பின்னர் 2025 ஆம் ஆண்டு செங்காங் பகுதியில் இருந்து பொங்கோல் ஈஸ்ட் பகுதிக்கு மாறிய அவர், அங்கு மறுசுழற்சி பெட்டி இல்லாததால் வீடுகளுக்கு வெளியே உலர வைக்கப்பட்ட உள்ளாடைகளை எடுக்கத் தொடங்கியதாக சொல்லப்பட்டுள்ளது.

CCTV காட்சி

அவர் ஏப்ரல் 25 முதல் ஜூன் 14 வரை, வெவ்வேறு குடியிருப்புகளில் இருந்து பல உள்ளாடைகளை திருடியதாக கூறப்படுகிறது.

பெண் ஒருவர் தன் உள்ளாடைகள் காணாமல் போவதை கவனித்து தன் கணவரிடம் கூறினார், பின்னர் அவர் CCTV காட்சிகளை ஆய்வு செய்ததில் ஊழியர் சிக்கினார்.

அதன் பின்னர் இந்த சம்பவம் குறித்து காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டது.

இதனை அடுத்து, ஊழியரின் புகைப்படம் குடியிருப்பு பகுதிகளில் உள்ள லிப்ட் அருகே ஒட்டப்பட்டு எச்சரிக்கை செய்யப்பட்டது.

சரணடைந்த ஊழியர்

இதனை கண்ட ஊழியர் தானாகவே சென்று காவல்நிலையத்தில் சரணடைந்தார்.

இது குறித்து அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், S$398 மதிப்புள்ள மொத்தம் 6 பெண்களிடமிருந்து 13 உள்ளாடைகளை திருடியதாக அவர் ஒப்புக்கொண்டார்.

மலேசியாவை சேர்ந்த அவரிடமிருந்து உள்ளாடைகளும் மீட்கப்பட்டன. அவரின் உண்மையான பெயர் வெளியாகவில்லை

இந்நிலையில், குற்றத்தை ஒப்புக்கொண்ட ஊழியருக்கு 5 நாள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. மீதமுள்ள குற்றச்சாட்டு தண்டனையின்போது பரிசீலனை செய்யப்படும் என சொல்லப்பட்டுள்ளது.

சிங்கப்பூர் லிட்டில் இந்தியாவில் உள்ள 15 கடைகளில் போலீஸ் விசாரணை

சிங்கப்பூர் TEP Pass: வெளிநாட்டு ஊழியர்களை பாத்திரம் கழுவ, பொட்டலம் போட வைத்து சிக்கிய 6 பேர்

வெளிநாட்டு ஊழியர்களுக்காக தனித்துவமாக உருவாக்கப்பட்ட Singai Tamil தளத்துடன் இணைந்திருங்கள்!

MOM, ICA அறிவிப்புகள், வேலை வாய்ப்பு செய்திகளை உடனுக்குடன் துல்லியமாக தெரிந்து கொள்ள - Follow the Singai Tamil Channel on WhatsApp

Join WhatsApp Channel
Photo of author

சிங்கப்பூர் செய்திகள் மற்றும் வெளிநாட்டு ஊழியர்களுக்கு வழங்கப்படும் உரிமைகள் குறித்த தகவல்களை கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக வழங்கி வரும் அனுபவம் வாய்ந்த பத்திரிகையாளர் இவர். இதற்கு முன்னர் தமிழ் மைக் செட் சிங்கப்பூர் மற்றும் தமிழ் டெய்லி சிங்கப்பூர் ஆகிய ஊடகங்களில் ஆசிரியராக பணியாற்றிய அனுபவம் இவருக்கு உண்டு. சிங்கப்பூர் வேலைவாய்ப்பு அனுமதிகள் உள்ளிட்டவை குறித்த அரசின் அதிகாரப்பூர்வ செய்திகளை ஆழமாக ஆராய்ந்து துல்லியமாக உள்ளது உள்ளபடி எழுதுவதில் நிபுணத்துவம் பெற்றவர் இவர்.