வெளிநாட்டு ஊழியர்களை ஏற்றிச்செல்லும் “கேஜ்” லாரிகளுக்கு 2027 முதல் தடை – மற்ற லாரிகளுக்கும் தடை பொருந்துமா?

Published: 10 Aug 2026, 11:26 AM |

சிங்கப்பூரில் 2027ஆம் ஆண்டு முதல் “கேஜ்” என்னும் கூண்டு போல் அடைக்கப்பட்ட லாரிகளில் வெளிநாட்டு ஊழியர்களை ஏற்றிச்செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்த அறிவிப்பு அனைத்து லாரிகளுக்கும் பொருந்துமா என்ற கேள்வி அடிக்கடி நம் தளத்திடம் கேட்கப்பட்டு வருகிறது.

இந்த அறிவிப்பு “கேஜ்” என்னும் கூண்டு போல் அடைக்கப்பட்ட லாரிகளுக்கு மட்டுமே பொருந்தும் என்பது உறுதியான தகவல். இதனை போக்குவரத்துக்கான மூத்த இணை அமைச்சர் Sun Xueling கடந்த மார்ச் மாதம் அறிவித்தார்.

வெளிநாட்டு ஊழியர்களை பாதுகாப்பற்ற முறையில் லாரிகளில் ஏற்றிச்செல்வதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து நாடாளுமன்றத்தில் பேசப்பட்டது. அதை தொடர்ந்து இந்த அறிவிப்பு வெளியானது குறிப்பிடத்தக்கது.

இந்த தடை வெளிநாட்டு ஊழியர்கள் மத்தியில் மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இருப்பினும், லாரி பயணம் முழுமையாக தடை செய்யப்பட வேண்டும் என்பதே அனைத்து ஊழியர்களின் ஆசையாக இருப்பதை அவர்களின் கருத்துக்கள் வாயிலாக புரிந்துகொள்ள முடிகிறது.

பெரும்பாலான ஊழியர்கள் இந்த தடையை முதல் வெற்றியாக பார்க்கின்றனர், மேலும் பலர் போக்குவரத்து அமைச்சருக்கு நன்றியை தெரிவித்தனர்.

கூண்டு லாரியும் அதனால் ஏற்படும் ஆபத்தும்

வெளிப்பக்கமாக தாழ் போடப்பட்ட அல்லது பூட்டப்பட்ட லாரிகள் விபத்தில் சிக்கினாலோ அல்லது தீ விபத்தில் மாட்டிக்கொண்டாலோ அதிலிருந்து ஊழியர்கள் வெளியே வர முடியாத நிலை ஏற்படலாம் என்பதை அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

சிங்கப்பூரில் உள்ள 50,000 லாரிகளில், சுமார் 500 முதல் 1,000 வரையுள்ள லாரிகள் கூண்டு வடிவமைப்பை கொண்டுள்ளன.

கூண்டு லாரிகளை 2027-க்கு பிறகு பயன்படுத்த வேண்டும் என முதலாளிகள் விரும்பினால் அவற்றை மாற்றியமைக்க வேண்டும் அல்லது பொருட்களை ஏற்றிச்செல்ல மட்டுமே பயன்படுத்த முடியும்.

இந்த அறிவிப்பை செயல்படுத்த தவறும் நிறுவனங்கள் தண்டனையை எதிர்கொள்ள நேரிடலாம் என்று போக்குவரத்து அமைச்சகம் (MOT) மற்றும் நிலப் போக்குவரத்து ஆணையம் (LTA) ஆகியவை தெரிவித்துள்ளன.

இருப்பினும், எந்த மாதிரியான தண்டனைகள் வழங்கப்படும் என்ற முழுமையான விவரங்கள் 2027 நெருங்கும் முன்பு அறிவிக்கப்படும் என்று கூறப்படுகிறது.

இதுகுறித்த மேலும் விவரங்கள் தொடர்ந்து அப்டேட் செய்யப்படும். இணைப்பில் இருங்கள்.

MOM, ICA அறிவிப்புகள், வேலை வாய்ப்பு செய்திகளை உடனுக்குடன் துல்லியமாக தெரிந்து கொள்ள - Follow the Singai Tamil Channel on WhatsApp

Join WhatsApp Channel
Photo of author

சிங்கப்பூர் செய்திகள் மற்றும் வெளிநாட்டு ஊழியர்களுக்கு வழங்கப்படும் உரிமைகள் குறித்த தகவல்களை கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக வழங்கி வரும் அனுபவம் வாய்ந்த பத்திரிகையாளர் இவர். இதற்கு முன்னர் தமிழ் மைக் செட் சிங்கப்பூர் மற்றும் தமிழ் டெய்லி சிங்கப்பூர் ஆகிய ஊடகங்களில் ஆசிரியராக பணியாற்றிய அனுபவம் இவருக்கு உண்டு. சிங்கப்பூர் வேலைவாய்ப்பு அனுமதிகள் உள்ளிட்டவை குறித்த அரசின் அதிகாரப்பூர்வ செய்திகளை ஆழமாக ஆராய்ந்து துல்லியமாக உள்ளது உள்ளபடி எழுதுவதில் நிபுணத்துவம் பெற்றவர் இவர்.