சிங்கப்பூர் சாலையில் ஆட்டம் போட்ட வெளிநாட்டு ஊழியர்: காணொளி வைரல்

Published: 17 Nov 2026, 4:58 PM |
migrant worker dance sg road

சிங்கப்பூரில் திறந்தவெளியில் நடனமாடிய வெளிநாட்டு ஊழியரின் காணொளி Facbook உள்ளிட்ட சமூக ஊடகங்களில் தீயாக பரவி வருகிறது.

பூங்கா போன்று தெரியும் இடத்தில் ஊழியர் நடமாடிய காணொளியை யாரோ ஒருவர் அவருக்கு தெரியாமலேயே வீடியோ எடுத்துள்ளார்.

அந்த காணொளி எங்கே, எப்போது எடுக்கப்பட்டது என்பது தெளிவாக தெரியவில்லை. ஆனால், அவர் ஒரு வெளிநாட்டு ஊழியர் என்பது மட்டும் அறிய முடிகிறது.

கலவையான கருத்துகள்

அந்த காணொளி பல கலவையான கருத்துக்களை பெற்றுவருகிறது. சிலர் அவரை கேலி செய்தாலும் பலர் பாராட்டினர்.

சிலர் அவர் போதையில் இருப்பதாக கேலி செய்தனர், பெரும்பாலான கருத்துக்கள் பாராட்டாகவே இருந்தது.

அவர், டோட்டோ லாட்டரியில் முதல் பரிசை வென்றுவிட்டாரோ என்று ஒருவர் ஜாலியாக கமண்ட் செய்திருந்தார்.

“பிறருக்கு எந்த தொந்தரவும் இல்லை.., அவர் மகிழ்ச்சியாக ஆடட்டும்” என சிலர் பாராட்டினர்.

“ஏதும் நடனப்போட்டி இருக்கிறது போல.. அதற்குத்தான் பயிற்சி எடுக்கிறார்” என ஒருவர் பாராட்டினார்.

வேலைக்கு நடுவே சற்று இளைப்பாற அவர் ஆடுவதாக சிலர் கருத்து கூறினர்.

“நான் மட்டும் வீடியோ எடுத்த நபராக இருந்தால்.. நானும் அவருடன் சேர்ந்து ஆட்டம் போட்டிருப்பேன்” என ஒருவர் கருத்து கூறி இருந்தார்.

அந்த காணொளி பல்லாயிரக்கணக்கான பார்வைகளை பெற்று இணையத்தில் பரவி வருகிறது.

Video: https://www.facebook.com/reel/1687106269778007

“Return Right” இயந்திரத்தில் மோசடி செய்த வெளிநாட்டு ஊழியர் – எச்சரித்த BCRS

Photo: SG DAILY UPDATE/Facebook

MOM, ICA அறிவிப்புகள், வேலை வாய்ப்பு செய்திகளை உடனுக்குடன் துல்லியமாக தெரிந்து கொள்ள - Follow the Singai Tamil Channel on WhatsApp

Join WhatsApp Channel
Photo of author

சிங்கப்பூர் செய்திகள் மற்றும் வெளிநாட்டு ஊழியர்களுக்கு வழங்கப்படும் உரிமைகள் குறித்த தகவல்களை கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக வழங்கி வரும் அனுபவம் வாய்ந்த பத்திரிகையாளர் இவர். இதற்கு முன்னர் தமிழ் மைக் செட் சிங்கப்பூர் மற்றும் தமிழ் டெய்லி சிங்கப்பூர் ஆகிய ஊடகங்களில் ஆசிரியராக பணியாற்றிய அனுபவம் இவருக்கு உண்டு. சிங்கப்பூர் வேலைவாய்ப்பு அனுமதிகள் உள்ளிட்டவை குறித்த அரசின் அதிகாரப்பூர்வ செய்திகளை ஆழமாக ஆராய்ந்து துல்லியமாக உள்ளது உள்ளபடி எழுதுவதில் நிபுணத்துவம் பெற்றவர் இவர்.