சிங்கப்பூரில் குடிநுழைவு விதிகளை மீறி தங்குவதற்கு இடம் கொடுத்த இந்தியர்கள் மூவர் மீது குடிநுழைவு சோதனை சாவடி ஆணையம் (ICA) வழக்குப் பதிவு செய்து குற்றம் சாட்டியுள்ளது.
முதல் வழக்கு
பட்டில் ஷுபம் பகவான் என்ற 27 வயதுமிக்க நபர், சாய் சீ ரோட்டில் உள்ள தனது வீட்டில் 19 வயதுமிக்க சர்மா கார்த்திக் என்பவரை சட்டவிரோதமாக தங்கவைத்தது விசாரணையில் தெரியவந்தது.
2025 ஆம் ஆண்டு செப்.8 அன்று அவரது வருகை அனுமதி (Visit pass) காலாவதியானது. அதிலிருந்து இந்த 2026 ஏப்ரல் வரை அவர் சட்டவிரோதமாக அங்கு தங்கி இருந்தது தெரியவந்துள்ளது.
இரண்டாம் வழக்கு
இந்த வழக்கில், குல்ஸன் என்ற 31 வயதுமிக்க நபருக்கு 2023 ஏப்ரல் மாதத்தில் வருகை அனுமதி காலாவதியானது.
இந்நிலையில், 31 வயதுமிக்க லத்தி என்பவர் இவரை 2025 டிசம்பர் முதல் 2026 மே மாதம் வரை யூசுன் ரிங் ரோட்டில் உள்ள அவர் வீட்டில் சட்டவிரோதமாக தங்க வைத்ததாக சொல்லப்பட்டுள்ளது.
மூன்றாம் வழக்கு
சும்பர் தீரஜ் குமார் (37) என்பவர், 2026 ஏப்ரல் 30 ஆம் தேதி அன்று வருகை அனுமதி காலாவதியான சித்து ஹார்ப்ரீட் சிங் (36) என்பவருக்கு உதவியது விசாரணையில் தெரியவந்துள்ளது.
ஜாலான் ரூமா திங்கி பகுதியில் உள்ள சும்பர் தீரஜ் வீட்டில், மே முதல் ஆகஸ்ட் மாதம் வரை ஹார்ப்ரீட் சிங் சட்டவிரோதமாக தங்க வைக்கப்பட்டதாக சொல்லப்பட்டுள்ளது.
நாடு கடத்தல்
இதில் சர்மாவுக்கு $4,000 அபராதம் விதிக்கப்பட்டு, சிங்கப்பூரிலிருந்து நாடு கடத்தப்பட்டார். மேலும் அவர் சிங்கப்பூர் வர தடை விதிக்கப்பட்டது.
குல்ஸனுக்கு 16 வாரம் சிறைத் தண்டனை மற்றும் 3 பிரம்படிகள் விதிக்கப்பட்டன. பின்னர் அவர் சிங்கப்பூரிலிருந்து நாடு கடத்தப்பட்டு, மீண்டும் சிங்கப்பூர் வர தடையும் விதிக்கப்பட்டது.
மேலும், சித்து ஹார்ப்ரீட் சிங்குக்கு $4,000 அபராதம் விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
சிங்கை சட்டம் தெரிந்துகொள்ளுங்கள்
சிங்கப்பூரில் அனுமதி காலாவதியான பிறகும் சட்டவிரோதமாக தங்குவோருக்கு தெரிந்தோ அல்லது கவனக்குறைவாகவோ உதவி செய்வது சட்டப்படி குற்றமாகும்.
கவனக்குறைவாக தங்க வைத்த குற்றம் நிரூபணமானால் S$6,000 அபராதம் மற்றும்/அல்லது ஓராண்டு சிறைத் தண்டனை விதிக்கப்படலாம்.
உண்மை தெரிந்தும் அலட்சியமாக தங்க வைத்த குற்றம் நிரூபணமானால், 2 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை மற்றும் அதிகபட்சம் S$6,000 வரை அபராதம் விதிக்கப்படலாம்.
இதுபோன்ற பயனுள்ள சட்டத் திட்டங்களை அறிந்துகொள்ள இணைப்பில் இருங்கள்.